வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா
புதுச்சேரி: வந்தே மாதரம், பாடல் இயற்றப்பட்டு 150வது ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில், விழா கொண்டாடப்பட்டது. கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு துறை செயலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், பிரதமர் மோடி, காணொலி மூலம் வந்தே மாதரம் பாடலை பாடும் போது, அனைவரும் எழுந்து நின்று, பாடினர். தொடர்ந்து, போலீஸ் இசைக்குழுவினரின் மூலம் இப்பாடல் இசைக்கப்பட்டது.