ஆரோவில்லில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா
வானுார்: மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவில் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் காணொலி மூலம் பங்கேற்றனர். இந்திய தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் 'வந்தே மாதரம்' பாடலின் 150ம் ஆண்டு விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த வரலாற்று நிகழ்வில் தமிழ்நாட்டில் செயல்படும் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆரோவில் அறக்கட்டளையும் ஆர்வத்துடன் பங்கேற்றது. டில்லியல் நடந்த தேசிய அளவிலான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையொட்டி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்ட உணர்வுப்பூர்வமான 'வந்தே மாதரம்' பாடலை ஒருமித்த குரலில் பாடினர். பாடல் நிறைவு பெற்றவுடன் ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அலுவலர் சீதாராமன் மற்றும் அறக்கட்டளை அலுவலகப் பணியாளர்கள் பிரமதர் மோடியின் உரையை காணொலி மூலம் கேட்டனர்.