போலீசை தாக்கிய 2 பேர் கைது
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் போலீஸ்காராக பணிபுரியும் பாலகுருநாதன், 27. இவர், ஊர்காவல் படைவீரர் மணிவர்மா, 25, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார். அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகே பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தினர்.இருவரும் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது, ஆத்திரமடைந்த, பைக்கில் வந்த அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சல்மான்கான், 27, கள்ளக்குறிச்சி, கருணா புரம் கவுசிகன், 27, ஆகியோர் போலீஸ்காரர் பாலகுருநாதன், ஊர்காவல்படை வீரர் மணிவர்மாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.அரியாங்குப்பம் போலீ சார் வழக்குப் பதிந்து சல்மான்கான், கவுசிகன் ஆகியோரை கைது செய்தனர்.