உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதையில்  தகராறு செய்த 2 பேர் கைது 

 போதையில்  தகராறு செய்த 2 பேர் கைது 

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அதில், வானுார், விநாயகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரங்கநாதன், 38; என்பவரை பிடித்து விசாரித்து கைது செய்தனர். இதேபோல், திருக்கனுார் ஏரிக்கரை அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய எரையூர், மெயின் ரோட்டை சேர்ந்த விநாயகமூர்த்தி, 19; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ