உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிபோதையில் தகராறு 2 பேர் கைது

குடிபோதையில் தகராறு 2 பேர் கைது

திருக்கனுார் : காட்டேரிக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே குடிபோதையில் 2 பேர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் உத்தரவின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களைபிடித்து விசாரணை நடத்தினர்.அதில், தமிழகப் பகுதியான சின்ன அம்மணங்குப்பம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த செல்வகுமார், 22; கூடப்பாக்கம், அம்பேத்கர் வீதியை சேர்ந்த தொல்காப்பியன், 22; என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேர் மீதும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை