கஞ்சா விற்ற 2 பேர் கைது
வில்லியனுார்: மங்கலம் ஐய்யனார் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த மங்கலம் ஐய்யனார் கோவில் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் அறிந்த மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோவில் எதிரே கஞ்சா விற்பனை ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் ஆரியப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் பழனிவேல்,31; செல்வகுமார் மகன் சுரேஷ்,18: என தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னையில் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள் வாங்கி வந்து கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. ் இவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். இருவர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.