மேலும் செய்திகள்
தேச கட்டமைப்பில் பங்காற்ற இளைஞர்களுக்கு கவர்னர் அழைப்பு
45 minutes ago
அனைத்து துறைகளும் இணைந்து பேர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு
58 minutes ago
வராகி அம்மனுக்கு மூல மந்திர யாகம்
1 hour(s) ago
திருக்கனுார்: திருக்கனுார் ஏரிக்கரை பகுதியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் பகுதியை சேர்ந்த அய்யனார், 48; மணிகண்டன், 28; என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சோதனை நடத்தியதில், மொத்தம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1200 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது.இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
45 minutes ago
58 minutes ago
1 hour(s) ago