விவசாயியை வெட்டிய 2 பேர் கைது
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 32; விவசாயி. இவர் மகள் பிறந்தநாளையொட்டி, நண்பர்களான ராஜேஷ்குமார்,சிலம்பரசன் மணிகண்டன் ஆகியோருடன் தனத்துமேட்டு சுடுகாட்டு பகுதியில் மது குடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த தனத்துமேட்டு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 19; அஜித்குமார் 20, ஆகியோர் முன் விரோதத்தில் ரங்கசாமியிடம் தகராறில் ஈடுப்பட்டனர். ஆத்திரமடைந்த விஷ்ணு, மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கசாமியை வெட்டினார். தடுக்க வந்த ராஜேஷ்குமாரின் இடது கையில் வெட்டு விழுந்தது.ரத்த வெள்ளத்தில் மிதந்த ரங்கசாமியை சக நண்பர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர். இதுகுறித்து ரங்கசாமியிடம் மருத்துவனையில் புகார் பெற்ற கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விஷ்ணு, அஜித்குமாரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.