உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் மணல் திருட்டு திருக்கனுாரில் 2 பேர் கைது

பைக்கில் மணல் திருட்டு திருக்கனுாரில் 2 பேர் கைது

திருக்கனுார்: திருக்கனுார் அருகே பைக்கில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் அடுத்த தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றில் இருந்து பைக்கில் மணல் கடத்தப்பட்டு வருவதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, பைக்கில் மூட்டையில் மணல் திருடி வந்த தேத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சபாபதி, 42; பிரேம்குமார், 18; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் மணல் மூட்டையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை