உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் சேதம் 2 பேர் மீது வழக்கு 

வாய்க்கால் சேதம் 2 பேர் மீது வழக்கு 

புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் செட்டித் தெருவில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ‘எல்’ வடிவ சிமென்ட் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  நேற்று முன்தினம் மாலை புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் வழியாக பைக்கில் அதேப்பகுதியை சேர்ந்த சரண்ராஜ், சூரியா ஆகியோர் செல்ல முயன்றனர். அவர்களை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வாய்க்கால் தற்போது தான் அமைக்கப்பட்டுள்ளதால், சில மணி நேரம் அவகாசம் அளிக்க வேணடுமென அறிவுறுத்தினர். இருப்பினும் அதனையும் மீறி சிமென்ட் வாய்க்காலை சேதப்படுத்தியபடி இருவரும் பைக்கில் சென்றனர்.  தகவலறிந்த கொம்யூன் பஞ்சாயத்து தொழில்நுட்ப உதவி அலுவலர் பாலமுருகன் சேதத்தை பார்வையிட்டார். இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கழிவுநீர் வாய்க்காலை சேதப்படுத்தியதாக இருவர் மீதும் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில், சரண்ராஜ், சூரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை