உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் மலட்டாற்று அருகில் மணலுடன் நின்று இருந்த இரு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது வடுக்குப்பம் மலட்டாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு இரு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்கள்மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பினர். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகள் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை