உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மீது லாரி மோதல் காரைக்காலில் 2 பேர் பலி

பைக் மீது லாரி மோதல் காரைக்காலில் 2 பேர் பலி

காரைக்கால்: காரைக்காலில் பைக்கில் சென்ற இருவர் லாரி மோதி பலியாகினர். புதுச்சேரி, காரைக்கால், தர்மபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சோலைமலை மகன் ஸ்ரீராம், 22; திருநள்ளாறு கொம்யூன் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கிருத்திக்ரோஷன்,19. இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு பைக்கில் சென்றனர். பைக்கை ஸ்ரீராம் ஓட்டினார். பி.கே.,சாலை சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. படுகாயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆபத்தான நிலையில் கிருத்திக்ரோஷன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரான கடலுார் சேடப்பாளையத்தை சேர்ந்த செல்வமணி, 50; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை