உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்ற 2 பேர் கைது

 குட்கா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி: பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் குட்கா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். உருளையான்பேட்டை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருவர் டிராவல்ஸ் பேக்கில் குட்கா பொருட்களை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் குட்கா விற்றுக் கொண்டிருந்த இரு வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை விசாரித்ததில், முருங்கப்பாக்கம் குமார், 29; புதுச்சேரி குபேர் நகர் மணிகண்டன், 36; என தெரிய வந்தது. இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்தரூ. 30 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை