மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணியாத மாணவர் விபத்தில் பலி
18-Nov-2025
வானுார்: புதுச்சேரி, கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் பசுபதி மகன் இளமாறன், 13; புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பிரவின், 13; இருவரும் கதிர்காமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், பிரவின் தன்னுடன் படிக்கும் இளமாறனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிற்பகல் 3:00 மணிக்கு சக நண்பர்களுடன் இருவரும் வீட்டின் மாடியில் பட்டம் பறக்க விட்டனர். பட்டம் இளமாறன் வீட்டிற்கு சென்ற மின் கம்பியில் சிக்கியது. உடன், இருவரும் பட்டத்தை கம்பியால் எடுக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கியெறியப்பட்டனர். இதில், படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Nov-2025