மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு இருவர் கைது
01-Jul-2025
புதுச்சேரி :மது போதையில், பொதுமக்களிடம் தகராறு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு 2 வாலிபர்கள் மது போதையில், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த சவரிநாதன், 28, கணேஷ், 28, என்பது தெரியவந்தது. இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
01-Jul-2025