போதையில் தகராறு 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி: போதையில் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டை சுடுகாடு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் மது போதையில் தகராறு செய்வதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். சோலை நகரை சேர்ந்த சூர்யா, 25, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று, கொசப்பாளையம் பகுதியில் மது போதையில் தகராறு செய்த, அதேப் பகுதியை சேர்ந்த குமார், 26, என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய் தனர்.