ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம்
புதுச்சேரி : புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=osobjjgf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பயிற்றுவிக்கும் 20 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பணி நியமனம் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மாத ஊதியம் ரூ.30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.