உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு

புத்தாண்டு நிகழ்ச்சி போட்டிகளில் 2,000 குழந்தைகள் பங்கேற்பு

புதுச்சேரி : புத்தாண்டையொட்டி புதுச்சேரி போத்தீசில் நடந்த போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர்.புதுச்சேரி போத்தீஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக புத்தாண்டு தினத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகின்றது.ஐந்தாம் ஆண்டாக நேற்று புத்தாண்டையொட்டி, அண்ணாசாலையில் உள்ள கடை வளாகத்தில் குழந்தைகளின் கற்பனை திறன், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாக சதுரங்கம், கேரம் மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதனால் போத்தீஸ் வளாகமே குழந்தைகளால் நிரம்பி இருந்தது. குழந்தைகள் தீட்டிய ஓவியங்கள் அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தன. போட்டி முடிவில், குழந்தைகளுக்கு பரிசு தொகுப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுளிப்பு விழா சில தினங்களில் நடைபெறும் என போத்தீஸ் பொது மேலாளர் அருண்மொழி தெரிவித்தார். போட்டி ஏற்பாடுகளை மனிதவள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ