உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 25ம் ஆண்டு வெள்ளிவிழா

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 25ம் ஆண்டு வெள்ளிவிழா

புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 25ம் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கல்லுாரி ஆண்டு விழா செலசியா 2025 இரண்டு நாட்கள் நடந்தது.கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். தக்க்ஷஷீலா பல்கலை கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவருமான தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் வேலாயுதம், டாக்டர் வைஷ்ணவி ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி, சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல்நாள் விழாவில், கல்லுாரியின் கலாச்சார குழு சார்பில் அனைத்து துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.2ம் நாள் விழாவில், திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான சந்தோஷ் நாராயணன், திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான பிரீத்தி முகுந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திரைப்பட பாடகர்கள் ஆன்டனி தாசன், ஸ்ரீதர் சேனா மற்றும் பிரியா ஜேசன் இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. 25ம் வெள்ளி விழா ஆண்டு கல்லுாரியின் டாக்குமெண்ட்ரி குறும்படம் தகடு வெளியிடப்பட்டது. யூடுப் புகழ் வி.ஜே. சித்து மற்றும் ஷெரிப் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியும், டிரோன் ஷோ நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண், மயிலம் பொறியியல் கல்லுாரி இயக்குனர் செந்தில் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ