மேலும் செய்திகள்
குடும்பமாக கஞ்சா விற்ற அண்ணன், தங்கை கைது
06-Dec-2024
திருபுவனை : திருபுவனையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருபுவனையில் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் கூட்டுறவு நுாற்பாலை பின்புறம் கஞ்சா விற்பதாக வந்த தகவலன்பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.அப்போது போலீசாரை கண்டது தப்பியோடிய 3 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில் 160 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பஞ்சாமாதேவி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகையன், 26; வி.அகரம் முருகன் கோவில் வீதியை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த், 28; கலிவரதன் மகன் கரண், 23, ஆகியோர் என, தெரிய வந்தது.விசாரணையில் அவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
06-Dec-2024