கஞ்சா விற்ற 3 பேர் கைது
புதுச்சேரி; நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.நெட்டப்பாக்கம், மடுகரை பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சப்இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு குழுவுடன் சேர்ந்து ஏரிப்பாக்கம் தனியார் இரும்பு தயாரிக்கும் கம்பெனி அருகில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிறுவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சந்தைப்புதுக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆளவந்தான், 22; வில்லியனுார், கீழ்சாத்தமங்கலம் முருகன் கோவில் தெரு கணேஷ், 25,விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், நவம்மாள் மருதுார், அம்பேத்கர் தெரு கிருஷ்ணமூர்த்தி, 26, ஆகியோர் என்பது தெரிந்தது.மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.