மேலும் செய்திகள்
பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது
21-Nov-2024
பாகூர்: பாகூர் அருகே காற்றுடன் பெய்த கன மழையால், ஆலமரம் வேறுடன் பெயர்ந்து விழுந்த 3 வீடுகள் சேதமாகின.வங்க கடலில் உருவாகி உள்ள பெங்கல் புயல் காரணமாக, புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை காற்றுடன் பெய்த மழையால், பாகூர், வார்க்கால் ஓடை அடுத்த புதுநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் வேறுடன் பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில், பரிமளாதேவி, விஜி,ஜீவா ஆகியோர் வீடுகள் சேதமாகின.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்த, பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பாகூர் கொம்யூன் பஞ்சாத்து, வருவாய் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வீடு சேதத்தை பார்வையிட்டனர்.
21-Nov-2024