உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று இடங்களில் விபத்து : 4 பேர் படுகாயம்

மூன்று இடங்களில் விபத்து : 4 பேர் படுகாயம்

புதுச்சேரி: அரியாங்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் 49; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தேநீர் அருந்துவதற்காக அரியாங்குப்பம் சிக்னல் அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த பிரித்தம் என்பவர் ஓட்டிச் சென்ற யமாகா பைக், மாணிக்கவாசகம் பைக் மீது மோதியது. காயமடைந்த மாணிக்கவாசகத்தை, பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி காயம்

லாஸ்பேட்டை, புதுப்பேட்டை மாரியம்மன் கோவி ல் வீதியை சேர்ந்தவர் குமரேசன் 62. இவர், கடந்த 6ம் தேதி இரவு ஆக்டிவா ஸ்கூட்டரில் தனது மனைவி அம்புஜம் 58; என்பவரை அழைத்து கொண்டு, புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கிருமாம்பாக்கம் தனியார் கல்லுாரி அருகே சென்ற போது, பின்னால் வந்த ரெனால்ட் கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா பேரளம் அருகில் பூந்தோட்டம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மைத்துனர் ராஜேந்திரன், 67; அம்பகரத்துாரில் உள்ள சாராயக் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி வேலை முடித்த ராஜேந்திரன் கடை வசூல் பணத்தை காரைக்கால் வேட்டைக்காரன் வீதியில் உள்ள அலுவலகத்தில் செலுத்திவிட்டு தனது பஜாஜ் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.பாரதியார் சாலையில் பைக்கில் சென்ற போது சின்னக்கண்ணு செட்டித் தெரு சந்திப்பில் அதிவேகமாக வந்த மினி வேன் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த ராஜேந்திரன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை