கார் விபத்தில் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்
காரைக்கால்: காரைக்காலில் கார் மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் மூவர் படுகாயமடைந்தனர். காரைக்கால் தனியார் மருத்துவகல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான கர்நாடகாவை சேர்ந்த கவுசிக்கவுடா,22; தனது ஹோண்டா சிட்டி காரில் அதே கல்லுரரியில் படிக்கும் அரியன் அணில் ஹோகாட, 20; மற்றும் நவநீத், 19 ;ஆகிய மூவரும் நேற்று முன்தினம் அதிகாலை 4:௦௦ மணிக்கு கல்லுாரியிலிருந்து காரில் புறப்பட்டனர். கார் கோட்டுச்சேரிமேடு மதுரைவீரன் கோவில் அருகே வளைவில் திரும்புபோது கார் கட்டுப்பட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி, அருகில் உள்ள வாய்க்காலில் இறங்கியது. இதில் காரை ஒட்டிய கவுசிக்கவுடா, உடன் பயணம் செய்த நவநீத், அரியன் அணில் ஹோகாட ஆகிய மூவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த சக மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நகர போக்குவரத்து போலீசார் அதிவேகமாக கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய கவுசிக்கவுடா மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.