உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் கைது; இருவருக்கு வலை

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் கைது; இருவருக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில், வழிப்பறி திட்டத்துடன் பதுங்கி இருந்த மூன்று பேரை கைது செய்தனர். தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். டி நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,9) இரவு இ.சி.ஆரில், ரோந்து சென்றனர். தனியார் ஓட்டல் அருகில் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோடியது. இதில் மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இருவர் தப்பினர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முத்தியால்பேட்டை குணசேகரன் மகன் அருண்குமார்,27; லாஸ்பேட்டை பெருமாள் மகன் கமலேஷ்,19; விழுப்புரம் பாபு மகன் விக்னேஸ்வரன், 26; என்பதும் தப்பியோடியது, கொட்டுப்பாளையம் செல்வம் மகன் பிரேம்குமார், மடுவுபேட் லோகேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொழிலபதிபர்கள், வணிகர்கள் மற்றும் இ.சி.ஆரில் காரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறி திட்டத்துடன் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத் அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று கத்திகள், ஐந்து முகமூடிகள், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ