உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதியை தாக்கிய 3 பேர் கைது

தம்பதியை தாக்கிய 3 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் கணவன், மனைவியை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் ஆசிரியர் நகர், வேலன் மணி காலனி முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமரதேவன். பெயிண்ட்டர். இவரது மனைவி அலமேலு. ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குமரதேவன் கீரை தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் போது திருநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கம் .இந்நிலையில் நேற்று முன்தினம் 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் திரவுபதி அம்மன் தெருவை சேர்ந்த மணிகண்டன், 22; வலத்தெருவை சேர்ந்த சதீஷ், 23 ; ஆகிய மூவரும் குமரதேவன் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து குமரதேவன் மற்றும் அவரது மனைவியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து 17வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை