உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை போலீசார் நேற்று (நவ.,23) ரோடியர்பேட் பகுதியில் ரோந்து சென்றனர். ரயில்வே மேம்பாலம் அருகில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் பெரியார் நகர் ரவிக்குமார் மகன் செல்வகுமார்,25, என்பதும், அவர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர். அதேபோல், முதலியார்பேட்டை போலீசார் நேற்று முருங்கப்பாக்கம் ரங்கசாமி நகரில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய முருங்கப்பாக்கம் அரவிந்த்,24; என்பரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முருங்கப்பாக்கம் கடலுார் சாலை, கைவினை கிராம சாலை சந்திப்பில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய முருங்கப்பாக்கம் சக்திவேல் மகன் ஆதித்யா,19 என்பவரை கைது செய்து செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை