மேலும் செய்திகள்
புதுச்சேரியில் 2 பேரிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்
22-Apr-2025
புதுச்சேரி : ஆன்லைன் கடன் செயலியில் பெற்ற கடனை செலுத்தியபின், புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நபர் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றார். கடனை நிலுவை தேதிக்குள் வட்டியுடன் திரும்பி செலுத்தினார். இதற்கிடையே, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கூடுதல் பணம் கேட்டு, அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டினார். இதனால், அச்சமடைந்த அவர், மர்ம நபருக்கு 50 ஆயிரத்து 394 ரூபாய் அனுப்பினார்.உருளையன்பேட்டையைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், எல்.ஐ.சி., அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், வங்கி கணக்கில் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஆதார் கார்டு, ஏ.டி.எம்., கார்டு விபரம் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார்.இதை நம்பி, அவரும், மர்ம நபர் கேட்ட விபரங்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 49 ஆயிரத்து 978 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும், காரைக்காலைச் சேர்ந்த நபர் ஒருவரின் மொபைல் எண்ணை, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப்பில் மர்மநபர் இணைந்துள்ளார். இதற்கிடையே அந்த குரூப்பில் இருந்த மற்றவர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அதிக லாபம் கிடைப்பதாக பதிவிட்டுள்ளார்.இதை நம்பிய காரைக்கால் நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இந்த 3 பேரும், 3 லட்சத்து 372 ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Apr-2025