மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு
27-Sep-2025
அரியாங்குப்பம் : வீடு புகுந்து 3 சவரன் நகை மற்றும் பணம் திருடி சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர். வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன்; மீன் பிடிக்கும் தொழிலாளி. நேற்று காலை, இவரது மனைவி சரிதா வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார். வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 3 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
27-Sep-2025