உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், 22; நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி, 21; மற்றும் கொம்பாக்கம் கனகவேல், 21, என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் மதிப்புள்ள 58 கிராம் கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை