மேலும் செய்திகள்
போதையில் ரகளை இருவர் கைது
25-Nov-2024
புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். ஆரியப்பாளையம் அசோக் நகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 26, எம்.என்.குப்பம் புது தெருவைச் சேர்ந்த காமராஜ், 20, பள்ளித் தென்னல் மந்தைவெளி தெருவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 19, ஆகியோர் ஆரியப்பாளையம் அரசு பள்ளி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
25-Nov-2024