உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3 ஆயிரம் பேருக்கு கிட்னி பாதிப்பு உள்ளது: டாக்டர் சுதாகர் தகவல்

இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3 ஆயிரம் பேருக்கு கிட்னி பாதிப்பு உள்ளது: டாக்டர் சுதாகர் தகவல்

புதுச்சேரி,: நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என டாக்டர் சுதாகர் பேசினார்.உலக சிறுநீரக தினத்தையொட்டி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நேற்று நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை உரையாற்றினார். சிறுநீரியல் துறை தலைவர் சுதாகர் அனைவருக்கும் நலமான சிறுநீரகம்- மேம்படுத்தப்பட்ட சமமான கவனிப்பு மற்றும் உகந்த நடைமுறை என்ற தலைப்பில் பேசுகையில், இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3 ஆயிரம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. இதே பாதிப்பு சதவீதத்தில் புதுச்சேரியிலும் உள்ளது.புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 15 டயாலிஸ் மிஷின்களில், மூன்று ஷிப்ட்டில் 45 லிருந்து 60 பேர் வரை நாள்தோறும் டயாலிஸ் செய்யப்படுகிறது. இதுவரை 27 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ள 50 சதவீத பேருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூளை சாவு அடைந்தவர்களின் கிட்னியை தானமாக பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தலாம். இதற்கான அனைத்து வசதிகளும் அரசு பொது மருத்துவமனையில் உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சரியான சிகிச்சை மூலம் கிட்னி செயலிழப்பை தடுக்கலாம் என அவர் கூறினார்.கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸாபேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி, சிறுநீரகவியல் துறை தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி