உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்

பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்

புதுச்சேரி: குருசுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கிய பிளஸ் 1 சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வில் 303 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பித்து இடம் கிடைக்கப்பெறாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சிறப்பு கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி துவக்கி வைத்தார். இதில், பள்ளி துணை முதல்வர்கள் சண்முகம், கார்த்திகேயன், கலியமூர்த்தி, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 303 பேருக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (8ம் தேதி) மற்றும் 11ம் தேதி பிளஸ் 1 சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி