உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 33 பேர் கைது

ரகளை செய்த 33 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளை செய்த 33 பேரை போலீசார் கைது செய்தனர். காலப்பட்டு போலீசார் நேற்று (அக்.,31) ரோந்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்த நவனிதன், 41, என்பவர் மதுபோதையில் சின்னகாலப்பட்டு சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், சேதாரப்பட்டு, நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், முதலியார்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவரையும், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, காட்டேரிக்குப்பம், வில்லியனுார், பாகூர் ஆகிய போலீஸ் நிலையத்தில் 2 பேர், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 3 பேர், கோரிமேடு, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலா 5 பேர் என, 32 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை