உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3,600 அடி நீள தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்

3,600 அடி நீள தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில், போதை பொருட்களுக்கு எதிராக 3,600 அடி நீள தேசிய கொடியை ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. சுதேசி மில் அருகே துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்தஎன்.சி.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3,600 அடி நீளமுள்ளதேசிய கொடியை கையில் ஏந்தியபடி, ஊர்வலமாக சென்று போதை பொருட்களுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் சுதேசி மில், மறைமலை அடிகள் சாலை, மிஷன் வீதி வழியாக சென்று, கடற்கரை சாலை காந்தி திடலில் முடிவடைந்தது. அங்கு, போதை ஒழிப்பு தொடர்பாக, மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !