மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது
24-Sep-2026
கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
26-Sep-2026
புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். வனத்துறை அலுவலகம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் குற்ற செயலில் ஈடுபடும் வகையில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் புதுச்சேரி, திடீர் நகரைச் சேர்ந்த ஆனந்த் மகன் கோகுல்சரண், 19; என்பதும், அவ்வழியாக வரும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரிந்தது. அவரிடம் கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தட்டாஞ்சாவடி, அனந்தபுரம், கம்பளி சுவாமி மடம் அருகே நேற்று முன்தினம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற டி. நகர் போலீசார், கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய சண்முகபுரம் நிஷாந்த், 27, என்பவரை கைது செய்தவர். அவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அய்யங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களை கத்தியை மிரட்டிய வானுார் செல்வகுமார், 26; என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும், உழவர்கரை, 3வது தெருவில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய உழவர்கரை சூர்யா, 20; என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசாரும் கைது செய்தனர்.
24-Sep-2026
26-Sep-2026