மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
24-Jul-2026
புதுச்சேரி: காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, வானுார் பகுதியைச் சேர்ந்த இளவரசன், 33, என்பவர் குடி போதையில், கணபதிசெட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல் உறுவையாறு சந்திப்பு பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாவாடை, 36, கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் ரகளையில் ஈடுப்பட்ட சேந்தநத்தம் பாலசுப்ரமணி, 26, மடுகரை சந்திப்பில் ரகளையில் ஈடுப்பட்ட மணிகண்டன், 37, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
24-Jul-2026