உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறு செய்த 4 பேர் கைது

தகராறு செய்த 4 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம், சாராயக்கடை அருகே பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சென்ற போது, தகராறு செய்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.புதுச்சேரி ஜே.ஜே. நகர் மாடசாமி, 25, உழவர்கரை சத்யா, 25, ஜெயப்பிரதாப், 26, ஆகியோர் என, தெரியவந்தது. அதே போல, மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் தகராறு செய்த, கடலுாரை சேர்ந்த பிரபாகரன், 40, என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை