உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் கடத்திய 4 பேர் கைது

மணல் கடத்திய 4 பேர் கைது

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். கண்டமங்கலம் போலீஸ் சரகம் வீராணம் அருகே உள்ள வடுக்குப்பம் மலட்டாற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை 4.30 மணிக்கு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலட்டாற்றில் 4 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவரகள் போலீசாரைக் கண்டதும் வண்டியில் இருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து, மணல் ஏற்றி வந்த 4 வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பண்டசோழநல்லுாரை சேர்ந்த சிவா 50; விஜயகுமார் 44; சிவமணி 48 மற்றும் வேல்குமார் 35; என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ