உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி

புதுச்சேரி : புதுச்சேரி, வேல்ராம்பட்டை சேர்ந்த ஆண் நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.இதைநம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக 5 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.குருமாம்பேட்டை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி, கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். இதை நம்பி, கிரெடிட் கார்டு விபரம் மற்றும் ஓ.டி.பி., எண்ணை தெரிவித்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்ட்டில் இருந்து 21 ஆயிரத்து 710 ரூபாய் மர்ம நபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.இதேபோல், சுல்தான்பேட்டை சேர்ந்த பெண் 88 ஆயிரத்து 477, அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 995 ரூபாய் என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 182 ரூபாய் இழந்துள்ளனர்.புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை