உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை: 45 பேர் அதிரடி கைது

பொது இடத்தில் ரகளை: 45 பேர் அதிரடி கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 28, என்பவர் மதுபோதையில் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர். இதேபோல் காலாப்பட்டு, நெட்டப்பாக்கம், திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவரும், சேதராப்பட்டு, லாஸ்பேட்டை, திருபுவனை, மங்கலம், தவளக்குப்பம் ஆகிய போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தலா 2 நபர்கள், டி.நகர், ரெட்டியார்பாளையம், பெரியகடை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 5 பேர் என 45 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !