மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
14-Oct-2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூராக பட்டாசு வெடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வீராணம் காமன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவகுமார், 38, என்பவர் கரியமாணிக்கம் வடகொல்லி சாலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், மடுகரை - சிறுவந்தாடு சந்திப்பில் பட்டாசு வெடித்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 28, என்பவரை கைது செய்தனர். இதேபோல், வில்லியனுாரில் பிரபாகரன், 35; முருகன், 48, மங்கலம் போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட அன்பரசன், 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
14-Oct-2025