உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை

தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை

புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, வரும் 31ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால், அன்றும் அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் வார விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாள் விடுமுறை உறுதியாகி உள்ளது.இந்நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான வரும் 30ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு 30ம் தேதி விடுமுறை அறிவித்தால், தீபாவளி பண்டிகை விடுமுறை 5 நாளாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை