உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏனாமில் சூதாடிய 5 பேர் கைது

ஏனாமில் சூதாடிய 5 பேர் கைது

புதுச்சேரி: சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஏனாம் பிராந்தியம், முத்துக்கூர், தத்தையா மார்க் பகுதியில் சித்தா ராம் பாபு என்பவரது வீட்டில் காசு வைத்து சூதாடுவதாக ஏனாம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த கரிராஜூ 43, மொடி பொயினா சுப்ரமணியம் 50, எலிபே ராஜேஷ் 38, மோடேபள்ளி சூரய்பாஸ் கரராவ் 40, மும்கண்ட பிரசாத் ராவ் 39, ஆகியோரை கைது செய்து, 2,300 ரொக்கப்பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை