உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை செய்த 5 பேர் கைது

இடத்தில் ரகளை செய்த 5 பேர் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பொது இடத்தில் மதுபோதையில் ரகளை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் விக்ரம் சாராபாய் சாலை அருகே மதுபோதையில் ரகளை செய்த நிரவி பகுதியை சேர்ந்த பாபு, 36; நகர போலீசார் கைது செய்தனர். இதுப்போல் திருநள்ளாறு அகலங்கண்ணு பம்புஹவுஸ் அருகில் மதுஅருந்திய அகலங்கண்ணு ராஜதுரை, 22; திருநள்ளாறு சரண்ராஜ், 27; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பகரத்துார் மேலவாய்க்கள் சாலையில் மதுபோதையில் ரகளை செய்த மயிலாடுதுறை இளம்பருதி, 42; போலீசார் கைது செய்தனர். நெடுங்காடு மேலகாசாகுடி தென்பாதி ஆற்றங்கரயைில் மது அருந்திய அதைப்பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, 22; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை