உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 5 பேர் கைது

ரகளை செய்த 5 பேர் கைது

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் அன்பழகன், 32; புதுப்பேட்டை ஜெயக்குமார், 26 ஆகியோரை கைது செய்தனர். அதே போல், கரையாம்புத்துார் போலீசார் ரோந்து சென்றபோது, மணமேடு மேம்பாலத்தில் ரகளை செய்த நெல்லிக்குப்பம் விமலநாதன், 32; கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட தேவனாம்பட்டினம் ஹரிஹரகன் 22; மண்டகப்பட்டு பிரேம்பாரதி, 24; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ