உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 5 பேர் கைது

ரகளை செய்த 5 பேர் கைது

காரைக்கால்: காரைக்கால் நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் புறவழிச்சாலையில் மதுபோதையில் பொது இடத்தில் ரகளை செய்த நபரை ரோந்து சென்ற தலைமைக் காவலர் விவேக் பிடித்து விசாரணையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமச்சிவாயத்தின் மகன் முருகானந்தம் 32 என்பவரை கைது செய்தனர். இதுபோல் காரைக்காலைச் சேர்ந்த ஷேக் அலாவுதீனின் மகன் முகமது அப்ரார் 21,சேகரின் மகன் ராஜா 35, புதுத்துறையைச் சேர்ந்த சகாயராஜின் மகன் ஜான் போஸ்கோ 29 ஆகிய நான்கு பேர் மீது நகர போலீசார் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்டதாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதே போல் காரைக்கால் திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பூம்புகார் பகுதியைச் சேர்ந்த குமார், 50; திருப்படினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி