மேலும் செய்திகள்
வந்தே மாதரம் நிகழ்ச்சி
1 minutes ago
பைக் திருட்டு
1 minutes ago
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
3 minutes ago
புதுச்சேரி: ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 01.07.2016ம் ஆண்டு ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி, ஆறாவது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர். குறிப்பாக, தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் ஆறாவது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனங்களில் 6வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி, 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.
1 minutes ago
1 minutes ago
3 minutes ago