உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்; அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பகீர்

புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்; அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பகீர்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி மேற்கொண்டால், 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை புதுச்சேரி அ.தி.மு.க., வரவேற்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொண்டால் சிறுபான்மையினர் நீக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய்யான கருத்துகளை கூறி வருகிறார். சிறுபான்மை மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது மாநில அரசு ஊழியர்கள் செய்யும் பணி. இந்நிலையில், ஒட்டுமொத்த ஊழியர்களும் சிறுபான்மையினர் பெயர்களை நீக்குவதாக கூறுவது, அரசு ஊழியர்களை அவமதிக்கும் செயலாகும். புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி மேற்கொண்டால், 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். இறந்து 10 ஆண்டிற்கு மேலானவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதே போன்று, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போரின் இரட்டை வாக்குரிமையை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ