உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய், மகன்களை தாக்கிய 6 பேருக்கு வலை

தாய், மகன்களை தாக்கிய 6 பேருக்கு வலை

புதுச்சேரி : லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லாஸ்பேட்டை எவரெஸ்ட் நகரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக பக்கத்து வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, மின்சார மீட்டர் பாக்ஸ் வைத்துள்ளார்.இதுதொடர்பாக அங்கு வாடகை வசித்து வரும் ரமேஷ் கலைச்செல்வியிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 17ம் தேதி இரவு கலைச்செல்வி, அவரது இரண்டு மகன்கள் கட்டுமான பணியை பார்வையிட சென்றனர்.அங்கு ரமேஷ், அவரது மனைவி வைஷ்ணவி ஆகியோர் கலைச்செல்வி, அவரது மகன்களை திட்டினர். தட்டிக்கேட்ட கலைச்செல்வி, அவரது மகன்களை, ரமேஷ் உறவினர்கள் உட்பட ஆறு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.கலைச்செல்வி புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷ் உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி